Friday 8 June 2018

தூங்குவதற்கு தாமதமானால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா.......

தூங்குவதற்கு தாமதமானால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா.......



இரவு நேரப் பணிகளின் தீமைகளையும், இரவில் நெடுநேரம் கண்விழிப்பதால் ஏற்படும் தீமைகளையும் மருத்துவர்களும், ஆய்வாளர்களும் கதறக் கதற சொல்லிப் பார்த்தார்கள் ஆய்வாளர்கள். ஆனால், யாரும் கேட்பதாக இல்லை... இப்போது அவர்களே ஒரு முடிவுக்கு  இறங்கி வந்துவிட்டார்கள். ‘லேட்டாகத் தூங்கினாலும் பரவாயில்லை. அதிலாவது ஓர் ஒழுங்கைக் கடைபிடியுங்கள்’ என்று இப்போது புதிய ஆலோசனையைச் சொல்லியிருக்கிறார்கள்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில்தான் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள். இதற்காக 30 நாட்களில் 61 மாணவர்களின் தூக்க பழக்கங்களை கண்டறிந்து, அந்தப் பழக்கங்களோடு அவர்களின் கல்வித்தரத்தோடு தொடர்புபடுத்தும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் எழும் மாணவர்கள், ஒழுங்கற்ற நேரங்களில் தூங்கியெழும் மாணவர்களைவிட கல்லூரியில் சிறந்தவர்களாக விளங்குவதை இந்த ஆய்வின் மூலம் அறிய முடிந்தது.

தூங்கச் செல்லும் நேரத்தை ஒழுங்காக கடைபிடிக்காதவர்கள் பகலில் வகுப்பறையில் தூங்குவதால் பாடங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை. மேலும், மூளையில் சர்க்காடியன் தாளங்கள்  என்னும் உறக்க தாளகதியானது ஒழுங்கற்ற உறக்கம் கொண்டவர்களிடையே தாமதப்படுகிறது. இதனால் இவர்களுக்கு உடல்பருமன் ஏற்படுவதாகவும், வழக்கமான நேரத்தில் உறங்குபவர்களுக்கு சர்க்காடியன் தாளங்கள் சீராக இருப்பதால் இவர்களுக்கு உடல்பருமன் அபாயம் இல்லை எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.

தினந்தோறும் இரவு 10 மணிக்கு படுத்து, காலை 6 மணிக்கு எழும் மாணவர்கள் ஒழுக்கமான கால அட்டவணையை கடைபிடிப்பதால் அவர்களின் வீட்டு பாடங்கள், தேர்வுக்குத் தயாராவது போன்றவற்றை முறைப்படி செய்துவிடுவதாகவும், ஒழுங்கற்ற நேரங்களில் உறங்குவது அந்த மாணவர்களுக்கு இருக்கும் மனஅழுத்தம், மனப்பதற்றம் போன்ற மனநோய்களின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். இது அவர்களின் கல்வித்தரத்தைப் பாதிக்கிறது என்பதையும் கண்டறிந்தார்கள்.

ஆராய்ச்சியை மேற்கொண்ட பிரிங்காம் மகளிர் மருத்துவமனையின் தூக்கக்கோளாறு பிரிவின் தலைமை மருத்துவரான சார்லஸ் சிய்ஸ்லர், ‘இரவு தாமதமாக உறங்கச் செல்வதைத் தவிர்க்க முடியாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ந்து அதே நேரத்தையாவது கடைபிடிக்க வேண்டும். அதே நேரத்தில் தினமும் தூங்கி, அதே நேரத்தில் அடுத்த நாள் எழ வேண்டும்’ என்கிறார்....

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....