வவுனியாவில் கடத்தப்படட குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு.
வவுனியாவில் கடத்தப்படட குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு- பெண்கள் இருவர் கைது. வவுனியாவில் குடிசெட் பகுதியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படட 8 மாத குழந்தை புதுக்குடியிருப்புப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
வவுனியா குடிசெட் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கடத்திச் செல்லப்படட 8 மாத குழந்தையை தாமே கடத்திச் சென்றதாக வவுனிய போலீசாருக்கு குழந்தையின் தந்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.குழந்தையின் தாய் தனது குழந்தையை தொலைபேசி மூலம் காண்பிக்கத் தவறியதனாலேயே தான் குழந்தையை கடத்த நேரிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
குழந்தையை உடனடியாக போலீசாரிடம் கையளிக்குமாறு போலீசாரால் கோரப்பட்டது.இந்த நிலையில் குழந்தை இன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment