அம்பிகாவதி பட நாயகியின் அடல்ட் காமெடிப் படத்திற்கு தடை .
ஹிந்தியில் அடல்ட் காமெடி படங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுபோல் சோனம் கபூர் நடித்திருக்கும் "வீரே டி வெட்டிங்" எனும் பெயரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கரீனா கபூர்,சுவரா பாஸ்கர் உட்பட 4 ஹீரோயின்கள் நடித்திருக்கின்றனர்.இப்படம் மும்பையில் வெளியாகுகின்றது . அதே நேரத்தில் பாகிஸ்தானிலும் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது.அங்குள்ள விநியோகஸ்தர்கள் படத்தை வெளியிட முடிவு செய்தனர்.
ஆனால் பாகிஸ்தானில் திரைப்பட தணிக்கை குழு இப்படத்தை தங்கள் நாட்டில் வெளியிட தடை விதித்திருக்கின்றது. இதுபற்றி பாகிஸ்தான் திரைப்படத் தணிக்கை குழு கூறும்போது இத்திரைப்படமானது ஆபாசவசனங்கள் நிறைந்த படமாக உள்ளது. எனவே தான் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
தணிக்கை குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாகவே இவ் முடிவை எடுத்துள்ளோம் என்றனர். முன்னதாக இப்படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட விநியோகத்தர்களும் தற்போது தங்கள் முடிவில் இருந்து பின்னவங்கியுள்ளனர்....
No comments:
Post a Comment