Wednesday 3 October 2018

உங்களிற்கு தெரியாமல் விரைவில் உங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து மறைந்துவிடக்கூடிய முதல் 05  அம்சங்கள்...


கடும் போட்டி நிலவுகின்ற ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னனி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டு வருகின்றனர். இவ்வாறான புதிய வசதிகளின் வருகையால் தற்போது ஸ்மார்ட் தொலைபேசிகளில் காணப்படுகின்ற பல்வேறு வசதிகள் வெளியேற்றப்படவுள்ளன. அவ்வாறு வெளியேறவுள்ள முதல் 05 விடயங்கள் பற்றியே பார்க்கவுள்ளோம்.

01. கைரேகை ஸ்கேனர் (fingerprint scanner)

கைரேகை ஸ்கேனர்கள் விரைவில் ஸ்மார்ட்போன்களில் இருந்து மறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான உதாரணமாக தற்போது ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஐபோன் எக்ஸ்எஸ் (iPhone XS), ஐபோன் எக்ஸ்எஸ் மாக்ஸ் (iPhone XS Max) மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் (iPhone XR) போன்ற தொலைபேசிகளில் இருந்து கைரேகை ஸ்கேனர்கள் வெளியேற்றப்பட்டன. அதற்கு பதிலாக முகஅடையாளம் (face ID) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ள/பயன்படுத்தும் அன்ராய்ட்டு தொலைபேசிகளும் முகஅடையாளத்திற்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

02. தலையணி பலா (headphone jack)

நாம் பாரம்பரியமாக பாவித்து வருகின்ற 3.5mm தலையணி பலா அமைப்பானது தற்போது அதிக முன்னனி ஸ்மார்ட்போன்களில் இருந்து பாவனைக்கு அப்பால் சென்றுவிட்டது. தற்போது வெளிவர இருக்கும் வன்பிளஸ் சிக்ஸ்ரி (OnePlus 6T) இல் இதற்கான பெரிய மாற்றம் ஒன்று உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

03. SIM card slots

ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அதன் சமீபத்திய 2018 ஐபோன் வரிசையில் இரட்டைசிம் வசதிகளிற்கு பதிலாக eSIM எனும் அமைப்பை பயன்படுத்தியுள்ளது. இதனால் சிம்களை சொருகுவதற்கான இடத்தை சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இந்தியாவில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றுக்கு மட்டுமே இதற்கான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் மற்றைய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதுபோன்ற ஆதரவுகளை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

04. வெளியக நினைவகங்கள் (microSD card slots)

தற்போது வெளிவருகின்ற முன்னனி மற்றும் விலைகூடிய தொலைபேசிகளின் உள்ளக நினைவகங்களின் அளவு அதிகரிப்பதனால் வெளியக நினைவகங்களிற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது. மேலும் தற்போது உள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 512GB வரை எமது ஸ்மார்ட்போனில் உள்ளக நினைவகத்தை பயன்படுத்தமுடியும். மேலும் வெளியக நினைவகங்களை சொருவுவதற்கான இடத்தையும் சேமிக்கலாம்.

05. ஒலி அமைப்பு பொத்தான்கள் (physical volume button)

எதிர்காலங்களில் வெளிவர இருக்கின்ற ஸ்மார்ட்போன்களில் ஒரேயொரு பொத்தான் மூலமாக power on/off, screen on/off மற்றும் volume up/down ஆகியன கட்டுப்படுத்தப்படவுள்ளன. குறித்த பொத்தானை இருமுறை அழுத்துவதன் மூலம் ஒலி அமைப்பை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....