Thursday, 7 June 2018

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சுகாதாரப் பாடம் கட்டாயம்- அமைச்சரவையினால் தீர்மானம்.


அமைச்சரவை தீர்மானத்தின் கீழ், 2023ம்  ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தர  பரீட்சைக்கு 'சுகாதாரப்பாடம் ' கட்டாயமாக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு நிபுணர்களின் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனவிரட்னவின் முன்மொழிவை பரிசீலித்தபின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நல்ல உடல்நலம், நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு மற்றும் நல்ல சுகாதார பழக்கவழக்கங்களைப் பயிற்றுவித்தல் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அத்தியாவசியமானதாகும்.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சுகாதார நோய்கள் வயது வேறுபாடின்றி பலரையும் பீடித்து கொண்டிருக்கின்றன. சுகாதாரம் தொடர்பான சரியான அறிவின்மையே இதற்கான மிக முக்கிய காரணமாகும்.
இதனால் சுகாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவுறுத்துவது அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. எனினும், தற்கால பாடசாலை கல்வித்திட்டத்தில் ஆறாம் வகுப்பு தொடக்கம் ஒன்பதாம் வகுப்பு வரையே சுகாதாரப் பாடம் கட்டாய பாடமாக கற்பிக்கப்படுவதுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அது கட்டாய பாடமல்ல.

அதனடிப்படையில், சுகாதாரப் பாடத்தை க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் கட்டாய பாடமாக மாற்ற வேண்டும் என்று சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் யோசனை முன்வைக்கப்பட்டது. 2023ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பாடத்திட்ட சீர்த்திருத்தின் போது இந்த யோசனை இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கல்வி மறுசீரமைப்புக்கான அறிஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளையும் கவனத்திற் கொண்டு, பாடசாலை பாடப்பரப்பு திருத்தங்கள் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினை கொண்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்களையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த யோசனையை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....