Tuesday, 12 June 2018

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2020ம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் ஒருபோதும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்காது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2020ம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் ஒருபோதும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்காது. 


முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒருபோதும் ஆதரிக்காது  என தெரிவிக்கப்பட்டது." ஜனாதிபதி என்பவர் தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதி மட்டுமல்லாமல் அவர்  நாட்டின் உச்சமும் ஆவார்" என்று குறிப்பிடப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  பொதுச் செயலாளர் ரொஹன லக்ஷ்மன் பியதாச மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பாளராக தற்போதைய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  நியமிப்பதாக சமீபத்தில் கூறியுள்ளனர்.

2020 ம் ஆண்டு ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த அவரது கட்சி போன்ற எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் தனது கட்சி ஒரு பரந்த கூட்டணியை அமைக்கும் என்று அமைச்சர் மேற்கோளிட்டுள்ளார் என பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் கரங்களில் மிகுந்த துன்பத்தை அனுபவித்துள்ளதாகவும், ஐந்து வருடங்களுக்கு மக்கள் இதே நிலைமையை அனுபவிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....