Saturday, 2 June 2018

அவர்கள் சுயஒழுங்கு செய்யாவிட்டால் சமூக ஊடகங்கள்  தடை செய்யப்படும் . 

நமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமூக ஊடகங்கள் காரணமாக நாட்டில் எழுந்த பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க அடிப்படையிலான உலகளாவிய நிறுவனத்துடன் கலந்துரையாடியதாகவும் அத்தகைய விடயங்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அவர் சில சமூக ஊடக வலைத்தளங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான சட்ட விரோத மற்றும் தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு காரணமான சமூக ஊடகங்களை பல நாடுகள் தடை செய்துள்ளன .

"சரியான  காரியங்கள்  மற்றும் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கு பயனுள்ள கல்வியை அளிப்பது போன்ற வலைத்தளங்களுடன் எங்களுக்கு எவ்வித பிரச்சினைகளும்  இல்லை " என்றும் அவர் கூறினார் .

வெலிசாரையில் புதிய கோர்ட்ஸ் காம்ப்லெக்ஸ் திறந்து வைக்க 2010.05.31 அன்று நடைபெற்ற விழாவில் கலந்துக்கொன்ற ஜனாதிபதி சிறிசேன நவின தொழில்நுட்பத்தின் வருகையுடன் குற்றங்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்று  கூறியுள்ளார். இதனால் கணினி மற்றும் ஸ்மாட்போன்கள் மற்றும் சமூக ஊடக  நெட்வோர்க் ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கண்டி ஊடாக சமூக ஊடக வலைத்தளங்களை தடுக்க நடவடிக்கை எடுத்தபோது நான் எதிர்ப்புகளை கண்டேன் ஆனால் பின்னர் இச்செயற்பாட்டிற்காக பாராட்டுகளையும் நன்றிகளையும் பெற்றேன். மேற்படி இது போன்ற விடயங்களை அவர் முன்வைத்திருந்தார் ......... 

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....