கல்லூரி மாணவர்களின் தலைவலியை குறைத்துள்ள கூகிள்
கூகுள் ஒரு புதிய அம்சத்தை செவ்வாய்க்கிழமை வடிவமைத்து எதிர்கால மாணவர்கள் அவர்களிற்குரிய சரியான கல்லூரியைத் தேட எளிதாகும் வகையில் அவ் அம்சத்தை வடிவமைத்துள்ளது.
இந்த அம்சம் ஒரு இடத்தில் ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட கல்லூரி தொடர்பான தகவல்களை ஒன்றாககாட்டக்கூடியது. நீங்கள் ஒரு நான்கு ஆண்டு அமெரிக்க கல்லூரி தேடும் போது, அது கல்லூரி சேர்க்கை விகிதம், செலவு, பட்டப்படிப்பு விகிதம், மாணவர் உதவி பயன்படுத்தப்பட்ட பின்னர் சராசரி செலவு, மற்றும் நீங்கள் ஒரு தேர்வு செய்ய உதவக்கூடிய மற்றைய தகவல்கள் பற்றி தகவல் முன்னிலைப்படுத்தும்.
உங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் தன்னைத்தானே ஒருங்கிணைக்க முயற்சிக்கும் மற்றொரு வழி கூகிளின் கல்லூரி தேடலாகும். கடந்த ஆண்டு, கூகிள் வேலை தேடலை உதவுவதற்கு ஒரு கருவியை அறிமுகப்படுத்தியது.
கூகுளின் பொறியாளர் கல்லூரி தேடலின் போது உள்ள கவலைகளை எளிதாக்க மற்றும் கல்வி விருப்பங்களை ஆராய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேடுவதை எளிதாக்குவதற்கு இவ் அம்சத்தை வடிவமைத்ததாக கூறினார். அது தேடுபொறியுடன் ஏற்கனவே பல மாணவர்களுக்காகப் போய்ச் சேருகிற நிலையில் இந்த அம்சம் உள்ளதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment