பூமியில் மனித உயிர்கள் கூண்டோடு அழிந்து போகக்கூடிய மூன்று முறைகள் விஞ்ஞானிகளால் கணிப்பு .
பூமியிலுள்ள மனித உயிர்கள் பின்வரும் மூன்று வழிகளில் எதாவது ஒன்றினால் மொத்தமாக அழியக்கூடும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.ஒரு கணிதரீதியான கணிப்பு மூலமாகவே நியூவோர்க் ரோச்செஸ்டர் பல்கலைக்கழக குழு ஒன்று பூமிக்கு இறுதிக்காலத்தில் என்னவாகும் என்று கணக்கிட்டுள்ளனர்.சனத்தொகை வளர்ச்ச்சி,காலநிலை மாற்றங்கள் மற்றும் அதன் விளைவுகளினாலேயே இவற்றை தோற்றுவிக்க முடியும் என கணித்துள்ளனர்.
அது பின்வரும் மூன்று வழிகளில் நடைபெறக்கூடும்.
*காலப்போக்கில் மனித நாகரிகம் குறைதல்.
இது சாதாரணமாக வானிலை,பூகோள வெப்ப விளைவு மற்றும் போர்கள் போன்றவற்றினால் நிகழும்.
*படிப்படியான மனித நாகரிக இழப்பு.
இதுவே அதிக உறுதியான / சாத்தியமான கணிப்பாகும்.பூமியில் 70% இயல்பான நிலைக்கு செல்ல முன் இது நடைபெற்றுவிடும்.
*பூரண மனித நாகரிக அழிவு.
இது பூமியினாலேயே மேற்கொள்ளப்படும். கிரகங்கள் பொதுவாக தங்களிற்கு சமநிலையற்ற நிலைக்கு தள்ளப்படும்போது தானே சமநிலையை ஏற்படுத்த வெளிவிடக்கூடிய எரிபொருட்கள் மற்றும் வாயுக்கள் போன்றவை மூலம் அழிதல்.
இவற்றையே அக்குழுவினர் முன்வைத்துள்ளனர்.......
No comments:
Post a Comment