Wednesday, 13 June 2018

நாட்டின் அனைத்து தபால் சேவைகளும் தற்காலிக வேலைநிறுத்தம்

நாட்டின் அனைத்து தபால் சேவைகளும் தற்காலிக வேலைநிறுத்தம் 


திங்கட்கிழமை ஏற்படுத்தப்பட்ட  காலவரையறையற்ற வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், தபால் சேவைகள் நாடு தழுவிய அளவில் நிறுத்தப்பட்டன என்று  ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணி கூறியது.

23 தொழிற்சங்கங்களில் இருந்து 23,000 க்கும் அதிகமான ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர், இது தபால் சேவையின்  80 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக  ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணி அமைப்பாளர் சின்தா பண்டார தெரிவித்தார்.

இதற்கிடையில் வேலைநிறுத்தத்தில் சேர விரும்பாத தபால்  மற்றும் தபால்நிலைய தொலைத்தொடர்பு  யூனியன் உறுப்பினர்கள் இன்று நள்ளிரவில் இருந்து வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தனர்(நிர்வாகம் கூறியது). இத்தடை காரணமாக கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் தபால்கள் மலைபோல் குவிந்துள்ளன.

அத்தோடு ஸ்பீட் போஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் மெயில் சேவை  ஆகியவை திணைக்களத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுத்துவதை முற்றிலும் பாதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....