Wednesday 8 August 2018

வாட்ஸ்சப்பில் ப்ளுவேல்(BLUE WHALE) அடுத்து மோமோ சாலஞ்ச்(MOMO CHALLENGE) எச்சரிக்கை!!!!


சமீபத்திய சமூகஊடகங்களின் வாயிலாக ஏற்பட்ட கெட்ட வெறித்தனமான நிகழ்வு ஒன்று காரணமாக அர்ஜென்டினாவில் 12 வயதான பெண் குழந்தை ஒன்று தற்கொலை செய்துள்ளமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தற்போதைய இளைஞர்களை மற்றும் குழந்தைகளை குறியாக வைத்து வாட்ஸ்சப் செயலி மூலம் பரவுகின்ற “மோமோ சாலன்ஞ்ச்” MOMO CHALLENGE காரணமாக ஏற்பட்ட மரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

மோமோ சாலஞ்சானது வாட்ஸ்சப்,பேஸ்புக் மற்றும் யூரியுப் போன்ற சமூகதளங்களின் மூலமாகவும் பரவலாம். இது ஒரு மிகவும் கொடூரமான கண்கள் பிதுங்கியதான முகம் கொண்ட ஒரு பெண் போல் உருவம் கொண்ட ஒருபடத்தை தனது முகப்புப்படமாகக் கொண்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எமது வாட்ஸ்சப் தளத்திற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி பின்னர் நாம் அதனை படித்து அவர்களை எமது வாட்ஸ்சப் நண்பராக உருவாக்குவதன் மூலம் நாமே ஆபத்தை விலைகொடுத்து வாங்குகின்றோம்.

இவ்வாறான வாட்ஸ்சப் கணக்குகள் ஜப்பான்,மெக்சிகோ மற்றும் கொலம்பியாவுடன் தொடர்புபட்டவை. நீங்கள் மோமோ கொடுக்கும் கட்டளைகளை செயல்படுத்தாவிட்டால் அது உங்களை பயமுறுத்த ஆரம்பிக்கும். மோமோவின் முக்கிய நோக்கம் தொலைபேசிகளில் இருந்து உங்களது அந்தரங்க தகவல்களை திருடுவதும் இறுதியில் உங்களை தற்கொலை செய்யவைப்பதுமே ஆகும்...


No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....