Sunday 12 August 2018

பேஸ்புக்கின் புதிய அம்சம்/இனிமேல் பேஸ்புக் அங்கீகாரங்களைப் பெற்ற பின்னரே பதிவுகளை இடமுடியும்!!


வெள்ளிக்கிழமை உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நெட்வொர்க்கான பேஸ்புக் அதன் தளத்தில் போலி அல்லது சமரசப்படுத்தப்பட்ட கணக்குகளை இயங்கச் செய்வதற்கு எதிராக மிகவும் கடினமான நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு அமெரிக்காவிலேயே அதிக எண்ணிக்கையிலான பின்பற்றுபவர்கள் உள்ளதால்  அப்பயனர்களிடமிருந்து அங்கீகாரத்தை குறிப்பிட்ட நிறுவனம் கோருகிறது. இன்று அமெரிக்கப் பார்வையாளர்களுடன் ஒரு பக்கத்தை நிர்வகிக்கும் வகையிலான பக்க வெளியீட்டு அங்கீகாரத்தை அறிமுகப்படுத்துகிறோம்  என்று பேஸ்புக் குறிப்பிட்ட கலந்துரையாடலில் தெரிவித்தது.

இவ்வாறான பக்கங்களை நிர்வகிக்கும் நபர்கள் தொடர்ந்து பதிவு செய்வதற்கு ஒரு அங்கீகார செயல்முறையை பூர்த்தி செய்ய வேண்டும். இது ஒரு போலி அல்லது சமரசம் கொண்ட கணக்கைப் பயன்படுத்தி ஒரு பக்கத்தை நிர்வகிப்பது தொடர்பாக தெளிவை ஏற்படுத்தும் என்று கலிபோர்னியாவில் உள்ள சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய நடவடிக்கைகள் பேஸ்புக் பக்கங்களின் நிர்வாகிகளுக்கு இரண்டு காரணி அங்கீகாரத்துடன் தங்கள் கணக்கைப் பாதுகாக்கும் வகையில் மற்றும் அவர்களின் உண்மை வீட்டு இருப்பிடத்தை(primary home location) உறுதிசெய்யும்.
அவ்வாறான பக்கங்கள் நிர்வகிக்கப்படும் பிரதான நாடு மற்றும் இருப்பிடங்களைக் காட்ட புதிய வசதி சேர்க்கப்பட்ட பின்னர் பக்கங்களின் தகவல் மற்றும் விளம்பரங்கள் பிரிவில் மக்கள் தமக்கு தேவையான மேலதிக விவரங்களைப் பார்ப்பார்கள் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் இன்ஸ்ராகிராம்(Instagram) போன்ற பிற பேஸ்புக் தளங்களில் இது அமையக்கூடும்.
நவம்பர் மாதம் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னதாக அதன் பயனர்களை தவறாக வழிநடத்தும் கணக்குகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைத் தடுக்கும் முகமாக பேஸ்புக்கின் இந்த சமீபத்திய செயற்பாடுகள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது.  
கடந்த வாரம் பேஸ்புக் அதன் பக்கங்கள் மற்றும் இன்ஸ்ராகிராமில் இருந்து 32 பக்கங்கள் மற்றும் கணக்குகளை ஒருங்கிணைந்த கெட்ட நடத்தை காரணமாக நீக்கியுள்ளது.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தல்களுக்கு முன்னதாக அரசியல் செல்வாக்கை செலுத்துவதன் நோக்கம் அதன் பாதுகாப்புப் பிரிவின் ஒருங்கிணைந்த தன்மையை பேணுவதற்காகும் என்று பேஸ்புக் கூறியது...


No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....