Tuesday 7 August 2018

2018இன் உலகின் முதல் 05 மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பற்றி உங்களிற்கு தெரியுமா?


உலகின் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் இரண்டாவது காலாண்டு தரவரிசை மதிப்பீட்டின் அடிப்படை  ஒவ்வொரு நிறுவனமும் கடந்த காலாண்டில் எவ்வாறு விற்பனையை நிகழ்த்தியது என்பதற்கான ஒரு புள்ளிவிவரத்தை இது அளிக்கின்றது. குறிப்பிட்ட செய்தியின்படி சாம்சங்  மற்றும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஹவாய்(HUAWEI) ஆப்பிள் தொலைபேசியை விட  அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்தம் 342.0 மில்லியன் யூனிட்டுகளை ஏற்றுமதி செய்தனர். இருப்பினும் 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட 348.2 மில்லியன் அலகுகளுடன் ஒப்பிடுகையில் 1.8% சரிவு ஏற்பட்டுள்ளது. உலகளவில் 2018இன் அரையாண்டிற்கான 5 பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் யாவை/ கண்டுபிடிக்கவும்..

01. சாம்சங்(SAMSUNG)

தென் கொரிய நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் சாம்ராச்சியமான சாம்சங் 20.9% சந்தை பங்குகளுடன் முதலிடத்தை தொடர்கிறது. ஒரு வருடத்திற்குள் விற்பனை 10.4% வீழ்ச்சியடைந்தாலும் நிறுவனம் அதனை சரிசெய்து வருகின்றது. முதல் காலாண்டில் தாமதமாக S9 / S9+ விற்பனைக்கு வந்தது. இதனால் சாதாரண விற்பனையை விட மெதுவாக விற்பனை செய்யப்பட்டது. சாம்சங் இந்த காலாண்டில் ஒரு முழு போட்டியையும் ஒரு முழு மந்தமான ஸ்மார்ட்போன் விற்பனையையும் சந்தித்துள்ளது. எனினும் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 வருகை இதனை மாற்றியமைக்கும் என்று நம்பப்படுகின்றது.

02. ஹவாய்(HUAWEI)

பட்டியலில் இரண்டாவது இடம் மிகவும் சுவாரசியமாக உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஹவாய் ஆப்பிள் நிறுவனத்தை முந்தியுள்ளது. மொத்தமாக 54.2 மில்லியன் சாதனங்களைச் சேர்த்து விற்பனையை சிறப்பாக உருவாக்கியுள்ளது. இதனால் ஹவாய் நிறுவனம் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக மாறியுள்ளது. இதனால் நிறுவனம் சந்தை பங்குகளின் 15.8%  எடுத்துக் கொண்டது. இதன் விளம்பரங்கள் ஆன்லைன் சேனல்களின் வாயிலாக வர்த்தகத்தில் ஒரு மாபெரும் அதிகரிப்பை ஏற்படுத்தியது.

03. ஆப்பிள்(APPLE)

மாபெரும் டெக் சாம்ராச்சியமான ஆப்பிள் பட்டியலில் மூன்றாவது நிலைக்கு தள்ளபட்டுள்ளது. நிறுவனம் இந்த அரையாண்டில் 41.2 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு சார்பாக ஒப்பிடுகையில் 0.7% வளர்ச்சியைக் காட்டியது. இந்த நிறுவனம் 12.1% சந்தை பங்குகளை உலகளாவிய சந்தையில் தன்வசப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் அடுத்த மாதம் முதல் மூன்று ஐபோன் மாதிரிகள் துவங்குவதற்கான முடிவில் உள்ளது. இந்த முடிவு வீழ்ச்சியை மீண்டும் சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

04. ஷியோமி(XIAOMI)

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷியோமி பட்டியலில் நான்காவது நிலையில் அமர்ந்துள்ளது. இந்தியாவில் சாம்சங் முன்னோக்கி உள்ளது என்றாலும் இரண்டாம் காலாண்டில் ஷியோமி உலகளாவிய அளவில் மொத்தம் 31.9 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் வாயிலாக நிறுவனம் மொத்தம் சந்தையில் 9.3% பங்குகளை தன்வசப்படுத்தியுள்ளது.

05. ஒஃபோ(OPPO)

ஐந்தாமிடம் மற்றொரு சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒஃபோவால்  கைப்பற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா போன்ற பிற சந்தைகளில் அதன் விரிவாக்கம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. நிறுவனம் கடந்த அரையாண்டில் மொத்தம் 29.4 மில்லியன் சாதனங்களை விற்பனை செய்துள்ளது.
     

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....