Wednesday 22 August 2018

வாட்ஸ்சப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |நீங்கள் இதை செய்யாவிட்டால் வாட்ஸ்சப் தானாகவே உங்கள் தரவை நீக்கமுடிவு செய்துள்ளது😕😕


வாட்ஸ்சப்பானது தானாகவே உங்களது தகவல்களை நீக்கும் என்று அறிவித்துள்ளது. வாட்ஸ்சப்பின் பயனாளர்களில் ஒரு வருடத்திற்கு மேலதிகமாக தங்களது தகவல்களை மீள்காப்பு/backup செய்யாதவர்களின் குறிப்பிட்ட தரவுகளை கூகிள் டிரைவ்/Google Drive இல் இருந்து நீக்குவதற்கு வாட்ஸ்சப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே இவை தானாகவே கூகிள் டிரைவ்/Google Drive இல் இருந்து அழிக்கப்படும்/நீக்கப்படும்.

எனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் பாவனையாளராக இருந்து நீங்கள் ஒரு வருடம் வரை தரவுகளை மீள்காப்பு செய்யவில்லை  என்றால் பின்னர் உங்கள் மொபைல் மூலமாக உங்களது எந்தவொரு தரவுகளையும் மீண்டும் பதிவிறக்க முடியாது என்றும் அனைத்தும் தானாகவே நீக்கப்படும் என்றும் வாட்ஸ்சப் நிறுவனம் கூறியுள்ளது. இது போன்றுதான் கூகிள் டிரைவ்/Google Drive இலும் செயற்பாடுகள் நடைபெறும். இதற்கான இறுதித்திகதி நவம்பர்12 ஆகும். இவை அனைத்தும் உங்களாலேயே/manually செய்யப்படவேண்டும்.

வாட்ஸ்சப் அனைவருக்கும் முக்கியமான மல்டிமீடியா அரட்டை தளமாக மாறியுள்ளது. மேலும் பெரும்பாலான மக்களின் தரவுத்தொகுப்பை மற்றும் மல்டிமீடியா கோப்புகளை எதிர்கால குறிப்புகளுக்கு கணிசமான அளவு சேமிப்பக ஆக்கிரமிப்பை முன்வைக்கின்றன. எனவே இவ்வாறான அடிப்படையிலேயே இவ் முடிவுகள் எடுக்கப்பட்டன...

இறுதித்திகதி 2018.11.12


மேலும் இப்பதிவு தொடர்பாக முழுமையான தகவல்களை அறிய விரும்பினால் முகப்பத்தகத்தில் எமது வெற்றித்தமிழன் செய்திகள் பக்கத்திற்கு விருப்பம் தெரிவியுங்கள்!!

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....