Monday 13 August 2018

தொலைந்த உங்களது ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பதற்கான இலகுவான வழி பற்றி உங்களிற்கு தெரியுமா?


உங்களது பாக்கெட்டில் இருந்து தவறுதலாக தொலைபேசி காணாமல் போய்விட்டதை நீங்கள் இன்னமும் அறியவில்லை. அந்த தருணத்தில் உங்களது உணர்வுகள் என்னவெல்லாம் யோசிக்கும்|அந்த தொலைபேசி திருடப்பட்டிருக்கலாம்|அவ்வாறு திருடப்பட்டால் தற்போது தொலைபேசி எங்கே உள்ளது அல்லது தற்செயலாக தொலைபேசி தொலைந்து இருக்கலாம் என்பதாகும். இருப்பதிலேயே மிகப்பெரிய கவலை தொலைபேசியில் உள்ள தரவுகள்,படங்கள்,வீடியோக்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் என்பவை பாதுகாப்பாக இருக்குமோ அல்லது களவாடப்பட்டுவிடுமோ என்பதுதான். தற்போது உங்களது தொலைபேசி கிடைத்து விட்டால் நீங்கள் பெருமகிழ்ச்சி அடைவீர்கள்|எனவே இனிமேல் அவ்வாறு ஏற்படாதவாறு எவ்வாறு தொலைபேசி அமைப்புகளை மேற்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

அத்தகைய ஒரு கணத்தில் பீதி இயற்கையாகவே ஏற்படக்கூடும். அதற்காகவே ஆப்பிள் தொலைபேசிகளில் “Find My Iphone” எனும் அம்சமும் அன்ராய்ட்டு தொலைபேசிகளில் “Find Your Phone/Find Device” என்ற அம்சமும் காணப்படுகின்றன.

கூகிள் வரைபடத்தின் உதவியுடன் நீங்கள் இப்போது உங்கள் தொலைபேசி உள்ள இடத்தை கண்காணிக்கலாம்|அதனை எப்படி செய்வது பற்றிய வழிமுறைகளை பார்ப்போம்.

முன்கோரிக்கைகள்
இணைய இணைப்பு மூலம் வேறு  ஸ்மார்ட்போனை அல்லது கணினியை இனணத்துக்கொள்ளுங்கள். உங்கள் கூகிள் கணக்கு தொடர்பான பயனர்பெயர்(username),கடவுச்சொல்(password)லைப் பயன்படுத்தி உள்நுழையுங்கள்.

குறிப்பு:: இந்த அம்சம் சரியாக வேலை செய்யவேண்டும் எனின் உங்கள் சாதனம் மாற்றப்பட(switched) வேண்டும் மற்றும் இருப்பிட சேவைகள்(location services) இயக்கப்பட்டு இருக்கவேண்டும்.


No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....