Wednesday 15 August 2018

2018ம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் 05 மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களை பற்றி நீங்கள் அறிவீர்களா?


IDC அல்லது சர்வதேச தரவு நிறுவனத்தால் சமீபத்திய ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2018ற்கான முதல் ஆறு மாதங்களிலும் அதிகமாக விற்கப்பட்ட முதல் ஐந்து ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட்டுள்து. ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அடிப்படையில் குறிப்பிட்ட நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் இந்தியாவில் 20 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளனர் மேலும் இது மொத்த ஸ்மார்ட்போன் சந்தையின் பங்குகளில் 75% வரை உருவாக்குகின்றது.

01. ஷியோமி(Xiaomi)

ஷியோமி 2018ற்கான முதல் அரையாண்டில் மொத்த ஸ்மார்ட்போன்கள் சந்தையில் 29.7% அளவை கணக்கில் வைத்துள்ளது. குறிப்பிட்ட நிறுவனம் ஏப்ரல் மாதமும், ஜூன் மாதத்திலும் மொத்தம் 10 மில்லியன் போன்களை விற்பனை செய்துள்ளது.

02. சாம்சங்(Samsung)

சாம்சங் ஷியோமிக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது. அது 23.9% சந்தை பங்கை தன்வசப்படுத்தியுள்ளது. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனம் குறிப்பிட்ட கால கட்டத்தில் 8 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

03. வீவோ(Vivo)

2018இன் அரையாண்டில் ஷியோமி மற்றும் சாம்சங்கிற்கு பின்னர் வீவோ ஆனது 12.6% பங்குகளை தன்வசப்படுத்தியுள்ளது. மேலும் சுமார் 4.2 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது.

04. ஒப்போ(Oppo)

வீவோவின் சகோதர கம்பெனியான ஒப்போ 2018இன் முதல் அரையாண்டில் நான்காவது நிலைப்பாட்டைப் பெற்றுக்கொண்டது. அது மொத்த சந்தை பங்குகளில் 7.6% அளவை தன்வசப்படுத்தியுள்ளது மற்றும் இந்தியாவில் சுமார் 2.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

05. ரான்சியன்(Transsion)

ரான்சியன் நிறுவனம் பற்றி நமக்கு பெரிதாக தெரியவில்லை என்றாலும் இந்நிறுவனம் 2018இன் முதல் அரையாண்டில் மொத்த சந்தை பங்குகளில் 5% அளவை தன்வசப்படுத்தியுள்ளது மேலும் 1.7 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது...


No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....