Friday, 6 July 2018

வாகன எரிபொருட்களிற்கான விலை என்றுமில்லாத அளவில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிப்பு


எரிபொருட்களிற்கான விலை அதிகரிப்பு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி மற்றும் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அது ஒரு லீற்றருக்கு எவ்வளவு அதிகரிப்பு என்றே அதிகரித்துள்ளது. அந்தவகையில் பெற்றோல் (ஒக்டேன் 92) ஒரு லீற்றரிற்கு 8 ரூபாவினாலும் பெற்றோல் (ஒக்டேன் 95) ஒரு லீற்றரிற்கு 7 ரூபாவினாலும் ஆட்டோ டீசல் ஒரு லீற்றரிற்கு 9 ரூபாவினாலும் சூப்பர் டீசல் ஒரு லீற்றரிற்கு 10 ரூபாவினாலும் அதிகரித்துள்ளன. மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

நிதி மற்றும் வளங்கள் அமைச்சு இவ்வாறு எரிபொருட்களிற்கான விலை அதிகரிப்பு தொடர்பான தகவல்களை இரண்டு மாதங்களிற்கு முன்னரே அறிவித்தது என்று கூறியது. இந்த விலைகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். மக்களின் நன்மை கருதி விலை நிர்ணயக்குழு இந்த எரிபொருள் விலைக்காக சிறந்த தீர்வை ஒரு வாரத்திற்குள் சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் மண்ணெண்ணெய் விலைகள் தற்போது அதிகரிக்கப்படவில்லை. மண்ணெண்ணெய்க்கான விலை  May.10.2018 அன்று அதிகரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....