தேசிய வீதிப்பாதுகாப்பு கவுன்சிலின்(NCRF) கருத்துப்படி ஆகஸ்ட் 01ம் திகதி தொடக்கம் அச்சிடப்பட்ட பில்கள்/விலைப்பட்டியல் வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பயனாளிகளை ஏற்றும் நோக்கில் உள்ள அனைத்து ஆட்டோக்களும் மீற்றர் கட்டாயம் பொருத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 01 திகதிக்குப்பின் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளாத சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த அச்சிடப்பட்ட பில்லில் பயணிகள் பயணம் செய்ததூரம், கட்டணம், ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணம், ஆட்டோ மற்றும் சாரதி பற்றிய தகவல்கள் என்பன கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்டோ சாரதிகள் தனக்கென்று ஒரு பில் வைத்திருந்தால் அதிலும் மேற்கூறப்பட்ட தகவல்கள் காணப்படவேண்டும். ( இச்சட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு பின்போடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் ) வீதிப்போக்குவரத்து பொலிசார் திடீரென்று இதனைச்சரிபார்க்கலாம். அவ்வாறு சரிபார்க்கும் போது உங்களிடம் மேற்கூறப்பட்ட விடயங்கள் இல்லாவிட்டால் spot fine வழங்கப்படும்.
குறிப்பிட்ட மீற்றரானது இலங்கை தரநிர்ணயப்படி(SLS) அமைந்திருக்க வேண்டும். அந்த மீற்றரின் விலையானது அதிகபட்சமாக ரூ. 10000 உள்ளே இருக்கும்/விற்பனை செய்யப்படும்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை share செய்யுங்கள் மேலும் இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து அறிந்து கொள்ளவேண்டும் எனின் எமது வெற்றித்தமிழன் செய்திகள் பக்கத்தை like செய்யுங்கள்!!
No comments:
Post a Comment