Wednesday, 25 July 2018

அன்ராய்ட்டு போன்களில் நீங்கள் பயன்படுத்தமுடியாத வாட்ஸ்சப்பின் புதிய அம்சம் பற்றி உங்களிற்கு தெரியுமா?


ஆப்பிளின் ஐபோன் பயனர்கள் இப்போது Siri அமைப்பைப் பயன்படுத்தி வாட்ஸ்சப் குழு செய்திகளை அனுப்பலாம்.
வாட்ஸ்சப்பிற்கான ஐபோன் பயன்பாடு புதுப்பிக்கப்பட்டதால் இப்போது பயனர்கள் siri மூலம் பேசும் வகையில் நேரடியாக வாட்ஸ்சப் குழுச்செய்திகளை அனுப்ப முடியும். முன்னர் Siriக்கான ஆதரவு தனிப்பட்ட செய்திகளை அனுப்ப வாட்ஸ்சப் பயன்பாட்டில் இணைக்கப்பட்டது. எனவே குழு செய்தியை அனுப்ப Siriஐ செயல்படுத்திய பின்னர் வாட்ஸ்சப் குழுவுக்கு செய்தி அனுப்ப வேண்டும். siri அரட்டைப் பட்டியலிலிருந்து குழு பெயரை உறுதிப்படுத்திய பின்னர் உங்கள் செய்தியைப் பேச்சு மூலமாகப் பெற்று அதை உரிய குழுவிற்கு அனுப்பும்.
  
சுவாரஸ்யமான வகையில் இந்த புதிய அமைப்பு ஐ.ஓ.எஸ்(IOS) அறிவிப்புகளில் ஊடக முன்னோட்ட அம்சத்தையும் சேர்க்கிறது. இதன் மூலம் உங்கள் ஐபோனில் புகைப்படங்கள் அல்லது ஜிப்களைப்(Gif) பார்க்க ஒவ்வொரு முறையும் வாட்ஸ்சப்பைத் திறக்க வேண்டியதில்லை. அதனடிப்படையில் அது பயன்பாட்டின் செய்திகள் அறிவிப்பு திரையில் வெளியீடுகளை காண்பிக்கும். இந்த அம்சம் இப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது அதனால் விரைவில் நீங்கள் அதை பெற முடியும். மேலும் பயனர்கள் அறிவிப்பில் இருந்து நேரடியாக ஊடக கோப்புகளை பதிவிறக்க முடியும். இந்த புதிய அம்சங்களை ஐ.ஓ.எஸ்(IOS) 10 மற்றும் அதற்கு மேல் உள்ள தளங்களில் மாத்திரமே பயன்படுத்தலாம்.

இந்தியாவில் வாட்ஸ்சப் அதன் மேடையில் போலிச்செய்தி பரவியது தொடர்பாக வன்முறை,பிரச்சனைகளிற்கு எதிராக போராடுகிறது. வாட்ஸ்சப் நிறுவனம் “சந்தேகத்திற்கிடமான இணைப்பு கண்டறிதல்” என்ற புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. வாட்ஸ்சப்பில் வரவிருக்கும் மாற்றங்களைக் கண்காணிக்கும் குறிப்பிட்ட வலைத்தள அறிக்கையின் படி உடனடி செய்தி பயன்பாட்டை ஒரு அம்சத்தில் ஏற்படுத்தமுடிகிறது. இது பெறப்பட்ட இணைப்பு சந்தேகத்திற்குரியதாக இருந்தால் பயனர்கள் அதனை கண்டறிய அனுமதிக்கிறது. பெயர் குறிப்பிடுவது போல பெறப்பட்ட இணைப்பு சில சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கங்களைக்  கொண்டிருந்தால் குறித்த அம்சம் பயனர்களை எச்சரிக்கும். இப்புதிய  அம்சம் ஒரு செய்தியின் மூலம் பெறப்பட்டவற்றில் ஆபத்தான அல்லது ஸ்பேம் இணைப்பைக் கண்டறிந்து அதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பயனர்களை எச்சரிக்கை செய்யும்.

வாட்ஸ்சப் இந்தியாவில் அதன் பயனர்கள் ஒரு முறை ஐந்து அரட்டைகளுக்கு மேல் அனுப்ப(forward) அனுமதிக்கப்பட முடியாது என்றவகையில் போலி செய்திகளின் சுழற்சியைக் குறைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொண்டது. பாரிய பிரச்சனைகளை தடுப்பதற்காக செய்தி ஊடகங்களுக்கு அடுத்ததாக தோன்றும் விரைவான முன்னோக்கி பொத்தானை(forward button) நிறுவனம் அகற்றிவிடும் என்றும் அறிவித்துள்ளது....


No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....