Tuesday, 24 July 2018

இனிமேல் வாட்ஸ்சப்பிடம் இருந்து யாரும் மறையவும் முடியாது ஒழியவும் முடியாது


வாட்ஸ்சப்பின் புதிய அம்சம் ஆபத்தான இணைப்புகளைப் பற்றி எச்சரிக்கை செய்யும். சில சந்தேகத்திற்குரிய உள்ளடக்கம்   இருந்தால் அது தொடர்பாக பயனர்களை எச்சரிக்கை செய்யும். பேஸ்புக்கு சொந்தமான வாட்ஸ்சப் அதன் தளங்களில் போலியான புதிய அச்சுறுத்தலை எதிர்த்து மற்றொரு அம்சத்தை உருவாக்குகின்றது / மேம்படுத்துகின்றது. வாட்ஸ்சப் நிறுவனம் “சந்தேகத்திற்கிடமான இணைப்பு கண்டறிதல்” என்று அழைக்கப்படும் ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்தது. குறிப்பிட்ட ஒரு வலைத்தளத்தின் அறிக்கையின்படி வாட்ஸ்சப்பில் வரவிருக்கும் மாற்றங்களை கண்காணிக்கும் உடனடி செய்தி பயன்பாடு அமைய உள்ளது. குறித்த ஒரு சந்தர்ப்பம்  சந்தேகத்திற்குரியதாகக் குறிக்கப்பட்டால் பயனர்கள் அதைப்பற்றி தகவல்களை கண்டறிய அனுமதிக்கும் வகையில் அமையுமாறு வேலை செய்கிறார்கள். பெயர் குறிப்பிடுவது போல் பயனருக்கு சில சந்தேகத்திற்குரிய உள்ளடக்கம் இருந்தால் பயனர்களை அவ் அம்சம் எச்சரிக்கை செய்யும்.

சந்தேகத்திற்கிடமான இணைப்பு அம்சம் ஒரு செய்தியில் பெறப்பட்ட ஆபத்தான அல்லது ஸ்பேம் இணைப்பு எவை என்று கண்டறியும். பின்னர் அவர்கள்(பயனர்கள்) அதை கிளிக் செய்வதற்கு முன்பு பயனர்களை அது எச்சரிக்கை செய்யும். இந்த அம்சம் இதுவரை அண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வாட்ஸ்சப்பின் பீட்டா பதிப்பு 2.18.221 இந்த புதிய அம்சத்துடன் வருகிறது மற்றும் இது அனைத்து பீட்டா சோதனையாளர்களுக்கும் கிடைக்கப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....