Monday, 11 June 2018

23 தபால் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன.

23 தபால் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன.

ஒருமித்த தபால் தொழிற்சங்கத்தின் காலவரை யறையற்ற  வேலைநிறுத்தம் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.  தபால் ஊழியர்கள் மற்றும் தபால் திணைக்களத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின்  மௌனம் காரணமாகவே வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.    
23 தொழிற்சங்கங்களும்  23,000 ஊழியர்களுடன்  தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
653 நாடு முழுவதிலுமுள்ள தபால் நிலையங்களிலும், 3,410 உப தபால் அலுவலகங்கள் மற்றும் மத்திய அஞ்சல் பரிவர்த்தனையிலிருந்து அனைத்து ஊழியர்களுடனும் 100 கட்டுப்பாட்டு அலுவலகங்களிலும் தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இணைந்தனர்.

No comments:

Post a Comment